புதுடில்லி, ஜூலை 1- இந்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி,இன்று டில்லி ஐஜி விளையாட்டரங்கத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் தொடங்கி வைத்தார்.
குக்கிராமங்களில் வசிக்கும் மக்களும் இணைய வசதியைப் பயன்படுத்தும் வகையில், நாட்டை இணைய மயமாக்கும் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற திட்டத்தைக் கடந்தாண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி அறிவித்தார்.
இத்திட்டத்தின் படி 2019ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 2.5 லட்சம் கிராமங்களில் அகன்ற அலைவரிசை(broad band) வசதி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கிக் கணக்குகளைக் கைபேசியில் கொண்டு வருதல், அனைத்து அரசு சேவைகளையும் கணினிமயமாக்குதல் போன்றவையே டிஜிட்டல் இந்தியா திட்டமாகும்.
இவ்விழாவில், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் 400 பேர் பங்கேற்றனர். 10,000க்கும் மேலான பொதுமக்களும் பங்கேற்றனர்.