Home நாடு “எங்கள் நிதியில் ஒரு ரிங்கிட் கூட நஜிப்பிற்குச் செல்லவில்லை” – 1எம்டிபி விளக்கம்!

“எங்கள் நிதியில் ஒரு ரிங்கிட் கூட நஜிப்பிற்குச் செல்லவில்லை” – 1எம்டிபி விளக்கம்!

444
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூலை 3 – “எங்கள் நிதியத்தில் இருந்து பிரதமர் நஜிப்பிற்கு எந்தவொரு நிதியும் செல்லவில்லை” என 1எம்டிபி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பத்திரிக்கைகள், 1எம்டிபி விவகாரத்தில் பல மில்லியன் டாலர்கள் பணப்பரிமாற்றம், நஜிப்பின் தனிக் கணக்குகளில் நடைபெற்றுள்ளது என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டைத் தெரிவித்தன. மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தில், பத்திரிக்கைகளின் குற்றச்சாட்டை 1எம்டிபி நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஊடகங்கள் தேவையில்லாமல் சர்ச்சைகளை உருவாக்குகின்றன. தங்களின் பொறுப்பில்லாத் தனமான குற்றச்சாட்டுகளால் எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகின்றன. எங்கள் நிதியத்தில் இருந்து பிரதமர் நஜிப்பிற்கு எந்தவொரு நிதியும் செல்லவில்லை” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, 1எம்டிபி விவகாரத்தில், அந்நிறுவனம் தலைமைக் கணக்காய்வாளர், பொதுக் கணக்குக் குழு மற்றும் பேங்க் நெகாரா நடத்தும் விசாரணைகளுக்கு விளக்கம் அளித்து வருகிறது. இக்குழு அளிக்கும் இறுதி அறிக்கையைப் பொருத்தே இந்த விவகாரத்தின் உண்மை நிலை வெளி உலகிற்குத்ய் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.