Home இந்தியா எளிய முறையில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் ஜெயலலிதா!

எளிய முறையில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் ஜெயலலிதா!

541
0
SHARE
Ad

jaya_oathசென்னை, ஜூலை 4- ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இன்று  காலை 10.45  மணியளவில் போயஸ்கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா 11 மணிக்குக் கோட்டைக்கு வந்து சேர்ந்தார்.

கோட்டையிலுள்ள தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சட்டப் பேரவைச் சபாநாயகர் தனபால் முன்னிலையில் உறுதிமொழியைப் படித்து ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெயலலிதா, தற்போது ஆறாவது முறையாகச் சட்டசபை உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார் என்பது தனிப் பெருஞ்சாதனையாகும்.