Home இந்தியா மாயமாய் மறைந்த கடற்படை விமானம்: சேலம் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்தது!

மாயமாய் மறைந்த கடற்படை விமானம்: சேலம் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்தது!

675
0
SHARE
Ad

ccசேலம், ஜூலை 4- இந்தியக் கடலோரக் காவல்படை விமானம் காணாமல் போய் இன்றோடு 26 நாட்கள் ஆகிவிட்டன. பல்வேறு முயற்சிகள் எடுத்தும், இன்னும் அவ்விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில்,சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்க முன் வந்துள்ளனர்.

சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் வகிதா பானு தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு, அதிர்வுகளைக் கொண்டு லேசர் முறையில், கடல் பகுதியில் எந்த இடத்தில் விமானம் விழுந்துள்ளது என்று துல்லியமாக ஆராய்ந்து கூறினர்.

இதைக் கொண்டு அந்த விமானத்தை மீட்டனர்.

இது போல், உலக நாடுகள் அனைத்திலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கண்டுபிடிக்க முடியாத விமானத்தைக் கண்டுபிடிக்க உதவினர்.

தற்போது,கடலோரக் காவல்படையின் காணாமல் போன டோர்னியர் விமானத்தை மீட்பதற்கு உதவி செய்ய வந்துள்ளனர்.

இது குறித்துச் சேலம் அரசுப் பொறியியல் கல்லூரி முதல்வர் வகிதா பானு கூறியதாவது:

“சேலம் அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மேம்படும் விதமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் இணைந்து, ஒலி மற்றும் ஒளி அதிர்வுகளைக் கொண்டு பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் கடலில் எந்த இடத்தில் விழுந்துள்ளது என்பதை அதிர்வலைகளைக் கொண்டு எனது தலைமையிலான அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துக் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதைக் கூறி உள்ளோம்.

மீட்புக்குழுவினர் தற்போது நாங்கள் குறிப்பிட்டுச் சொன்ன பகுதியில் தேடி வருகின்றனர்.

விரைவில் இந்த விமானத்தை மீட்டு எடுப்பார்கள் என்று நம்பிக்கையாக உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.