Home நாடு மக்களுக்கு நான் துரோகம் செய்யவில்லை – நஜிப் உருக்கம்

மக்களுக்கு நான் துரோகம் செய்யவில்லை – நஜிப் உருக்கம்

612
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூலை 7 – தன் மீது ‘வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ செய்தி நிறுவனம் சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து மீண்டும் ஒரு முறை பதிலளித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், உண்மை ஒருநாள் வெளியே வரும் என்று தெரிவித்துள்ளார்.

1எம்டிபி (1Malaysia Development Berhad) விவகாரத்தில் தன் மீது சுமத்தப்படும் பல குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று கூறி வரும், அம்னோ தலைவர்களுக்கும், பாஸ் ஆன்மீகத் தலைவர் டத்தோ ஹாரோன் டின்னுக்கும் தனது நன்றிகளை நஜிப் தெரிவித்துக் கொண்டார்.

“நான் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை. உண்மையை நிரூபிக்க நிச்சயம் ஒரு வழியைக் கண்டறிவேன். அதுவரை அமைதியாக இருங்கள், உண்மை விரைவில் வெளியே வரும்” என்று நேற்று நிகழ்வு ஒன்றில் நஜிப் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில், மக்கள் இரண்டாகப் பிரிவது நல்லதல்ல என்று குறிப்பிட்ட நஜிப், மக்களையும், தலைவர்களையும் வெவ்வேறு அரசியல் சார்புகள் இருந்தாலும் கூட ஒற்றுமையோடு இருக்கும் படி வலியுறுத்தியுள்ளார்.