Home நாடு 1எம்டிபி குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் – பெர்சே வலியுறுத்து

1எம்டிபி குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் – பெர்சே வலியுறுத்து

549
0
SHARE
Ad

Mariaகோலாலம்பூர், ஜூலை 7 – 1எம்டிபி குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனப் பெர்சே வலியுறுத்தி உள்ளது.

இல்லையேல் மக்கள் தங்களது கேள்விகளுக்கு விடையளிக்கக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதைக் காண நேரிடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் விசாரணை அமைப்புகள், பொதுமக்களுக்கு அனைத்து விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு எந்தவிதச் சந்தேகமும், அவநம்பிக்கையும் ஏற்படாது,” எனப் பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

1எம்டிபி முறைகேடு தொடர்பான விசாரணையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்கப் போவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விசாரணையில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறப்பட்டாலும், விசாரணை அமைப்புகள் தங்களது பணியை முடிக்கும் வரை காத்திருப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.

“விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதுடன், மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் நம்புகிறோம். இதற்கிடையே நிதியமைச்சர் உள்ளிட்ட தனது பொறுப்புகளில் இருந்து பிரதமர் விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

முந்தைய ஊழல்கள்  போர்வையின் (ஜமுக்காளத்தின்) கீழே மூடி மறைக்கப்பட்டதைப் போல் இப்போதும் செய்ய முடியாது. விசாரணையில் முன்னேற்றம் இல்லையெனில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்துப்  பரிசீலிப்போம். பெர்சே 4.0ம் அதில் அடங்கும்,” என்றார் மரியா சின்.