Home நாடு பாஸ் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் – பினாங்கு அரசு

பாஸ் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் – பினாங்கு அரசு

472
0
SHARE
Ad

lim-guan-eng-1-620x3201ஜோர்ஜ்டவுன், ஜூலை 7 – பினாங்கு பாஸ் சட்டப்பூர்வ நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளுமானால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகப் பினாங்கு மாநில அரசு தெரிவித்துள்ளது.

பாஸ் கட்சியின் வழக்கறிஞர்களிடம் இருந்து வரக்கூடிய கடிதத்திற்காகக் காத்திருப்பதாக முதல்வர் லிம் குவான் எங் குறிப்பிட்டார். சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆராய பாஸ் கட்சிக்கு உரிமையுள்ளது என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் மன்றங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தில் பங்கேற்றிருந்த பாஸ் உறுப்பினர்களைப் பினாங்கு அரசு நீக்கியுள்ளது. இதையடுத்து அம்மாநில அரசு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க பாஸ் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

பினாங்குத் தீவு ஊராட்சிமன்றத் தலைவர் (கவுன்சிலர்) யாகோப் ஓமார் மற்றும் செபராங் பிராய் கவுன்சிலர் ஓமர் ஹாசன் ஆகிய இருவரையும் பதவியிலிருந்து பினாங்கு அரசு நீக்கியது குறித்து ஆராயுமாறு வழக்கறிஞர்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாகப் பாஸ் தகவல் ஆணையர் முகமட் ஃபௌசி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூன் 17ஆம் தேதி இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.