Home நாடு 1எம்டிபி நிறுவனத்தில் காவல்துறை அதிரடிச் சோதனை!

1எம்டிபி நிறுவனத்தில் காவல்துறை அதிரடிச் சோதனை!

468
0
SHARE
Ad

1MDB.கோலாலம்பூர், ஜூலை 8 – இன்று காலை தலைநகர் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள 1எம்டிபி அலுவலகத்தில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளதாக மலேசியாகினி உட்பட முக்கியச் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மெனாரா ஐஎம்சி கட்டிடத்தில் 8-வது மாடியில் 1எம்டிபி அலுவலகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1எம்டிபி விவகாரத்தில் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் நிதிப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வால் ஸ்ட்ரீட் ஜார்னல் கூறும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, இவ்விவகாரத்தில் தொடர்புடைய 6 வங்கிக் கணக்குகளை நேற்று முடக்கியது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice