Home கலை உலகம் நடிகர் ஜெயராம் யானைத் தந்தங்கள் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு!

நடிகர் ஜெயராம் யானைத் தந்தங்கள் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு!

641
0
SHARE
Ad

jayaram thuppakkiதிருவனந்தபுரம், ஜூலை 8- நடிகர் ஜெயராம் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்த ‘பெரும்பாவூர் கண்ணன்’ என்ற யானை உடல்நலக் குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது.

வனத்துறையினர் அந்த யானையைப் பிரேதப் பரிசோதனை செய்த பின்,  தந்தங்களை நீக்கி விட்டுப் புதைத்து விட்டனர். அந்தத் தந்தங்கள் இது நாள் வரையிலும் வனத்துறையினரின் வசம் இருந்தது.

தான் வளர்த்த யானையின் நினைவாக அதன் தந்தங்களைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஜெயராம் வனத்துறையினருக்குக் கடிதம் எழுதினார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வனத்துறையினர், அந்தத் தந்தங்களை விற்கவோ பிறருக்குப் பரிசாகத் தரவோ கூடாது என்கிற நிபந்தனையோடு அவரிடம் ஒப்படைத்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இதற்கு வன விலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல்- “வன விலங்குகளை வாரிசுரிமையாகப் பெற்றவர்கள் மட்டுமே அவற்றுக்கோ, அவற்றின் உடைமைகளுக்கோ உரிமையாளர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று சம்பந்தப்பட்ட சட்டம் கூறுகிறது. ஆனால், ஜெயராம், அந்த யானையை வாரிசுரிமையாகப் பெறவில்லை. வேறு ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கினார்.

எனவே, அவர் தந்தங்களுக்கு உரிமை கொண்டாடுவது சட்ட விரோதம். அதற்குக் கேரள வனத்துறை அமைச்சரே அனுமதி வழங்கியிருப்பது சரியல்ல. எனவே, இப்பிரச்சினையில் பிரதமரும் தேசிய வன விலங்கு வாரியத் தலைவரும் உடனடியாகத் தலையிட வேண்டும்” என்றும் கடிதம் எழுதியுள்ளனர்.