Home நாடு 13-வது பொதுத்தேர்தல் செல்லாது: தேமு-வுக்கு எதிராகப் பிகேஆர் வழக்கு!

13-வது பொதுத்தேர்தல் செல்லாது: தேமு-வுக்கு எதிராகப் பிகேஆர் வழக்கு!

601
0
SHARE
Ad

NURULகோலாலம்பூர், ஜூலை 8 – 1எம்டிபி விவகாரத்தில், ‘வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின் படி, கடந்த 13-வது பொதுத்தேர்தலில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு 1எம்டிபி பணம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதால், தேசிய முன்னணியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடுக்கவுள்ளன.

இது குறித்து பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நஜிப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால், தேசிய முன்னணியின் வெற்றி செல்லாது என அதன் மீது வழக்குத் தொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, பெர்சே 2.0, சி4, டிரான்ஸ்பரென்சி இண்டர்நேசனல் மலேசியா ஆகியவற்றின் உதவியோடு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் நூருல் இசா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice