வாஷிங்டன், மார்ச்.8- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
1994ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டு தற்போது புதிய வடிவில் அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு அமெரிக்காவின் பெண்கள் அமைப்பும், சமூகநல அமைப்புக்களும் வரவேற்பு அளித்துள்ளன.
மகளிர் தினத்தில் இந்த புதிய சட்டம் கையெழுத்தாவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.