Home நாடு 1 எம்டிபி அலுவலகத்தில் சோதனை: முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதா காவல்துறை?

1 எம்டிபி அலுவலகத்தில் சோதனை: முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதா காவல்துறை?

543
0
SHARE
Ad

Najib 1MDBகோலாலம்பூர், ஜூலை 9 – 1 எம்டிபி நிறுவனத்தில் இருந்து காவல்துறையினர் நிறைய ஆவணங்களைக் கையகப்படுத்தியதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

மெனாரா ஐஎம்சியில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் வணிகக் குற்றவியல் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அப்போது பல ஆவணங்களை 3  காவல்துறையினர் அலுவலகத்திலிருந்து வெளியே எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

புதன்கிழைம காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்தச் சோதனை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. அந்தக் கட்டிடத்தின் எட்டாவது தளத்தில் அமைந்துள்ள 1 எம்டிபி அலுவலகத்தைக் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

#TamilSchoolmychoice

மெனாரா ஐஎம்சி கட்டிட வளாகத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் திடீரெனக் காவல்துறையினர் அங்கு வந்ததற்கான காரணம் தெரியாமல் அந்நிறுவனங்களின் ஊழியர்கள் அங்குமிங்குமாகக் குழப்பத்துடன் நடமாடிக் கொண்டிருந்தனர்.

இந்த அதிரடிச் சோதனை நடவடிக்கை குறித்துச் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைக் கட்டட வளாகத்திற்கு வெளியே நிற்குமாறு கேட்டுக்கொண்ட காவல்துறையினர் புகைப்படங்கள் அல்லது காணொளிப் பதிவுகளை எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

இந்தச் சோதனை நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.