Home இந்தியா இந்தியா மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிப்போம்: பாகிஸ்தான் மிரட்டல்!

இந்தியா மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிப்போம்: பாகிஸ்தான் மிரட்டல்!

560
0
SHARE
Ad

pakiஇஸ்லாமாபாத், ஜூலை 9- இனி இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் நடந்தால், இந்தியா மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கத் தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஹவாஜா ஆசிப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

1997-ல் நடைபெற்ற கார்கில் போரில் தோல்வியடைந்ததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறிப் பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லையில் அடிக்கடித் தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் நாளை நடக்கும்  ‘எஸ்சிஓ’ எனப்படும் ஷாங்காய்க் கூட்டுறவு அமைப்பு மாநாட்டின்போது, மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும்  பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இருதரப்பு உறவு மேம்பாடு குறித்து இருவரும் விவாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இச்சுமூகமான பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் வகையிலும், இந்தியாவின் பொறுமையைச் சோதிக்கும் வகையிலும் பாகிஸ்தான்  ராணுவ அமைச்சர் கவாஜா ஆஸிப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் இ-தலிபான் பயங்கரவாதிகளுக்கும், பலுாச் பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவாக, இந்தியா செயல்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்கள், வெறும் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்டவை அல்ல; தேவைப்பட்டால் அவற்றைச் சரியான நேரத்தில் இந்தியா மீது பயன்படுத்தத் தயங்க மாட்டோம்”

இவ்வாறு கவாஜா ஆஸிப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த அணு ஆயுத மிரட்டல் பரபரப்பை இந்தியரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரதமர் மோடி- நவாஸ் ஷெரீப் சந்திப்பு நிகழுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தானின்முன்னாள் அதிபர் முஷாரப்பும், “அணு ஆயுதங்களைப் பாகிஸ்தான் வெறும் காட்சிப் பொருளாக உருவாக்கி வைக்கவில்லை” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.