Home இந்தியா இந்தியாவில் அசல் அரிசியுடன் பிளாஸ்டிக் அரிசி கலப்படம்!

இந்தியாவில் அசல் அரிசியுடன் பிளாஸ்டிக் அரிசி கலப்படம்!

613
0
SHARE
Ad

pboiledபுதுடெல்லி,ஜூலை 9-  இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் அரிசி( நெகிழி அரிசி)  கலக்கப்படுவதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுக்ரீவ துபே என்ற வழக்கறிஞர் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

‘‘உலக மயமாக்கல் காரணமாகச் சீனாவில் இருந்து அரிசி ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகின்றன.

#TamilSchoolmychoice

ஆனால் தரப் பரிசோதனை நடத்தப்படுவதில்லை. அசல் அரிசியுடன் சீனப் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது. இதைச் சாப்பிடும்போது, மிக மோசமான இரைப்பை நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே அரிசி, பருப்பு, பழ மொத்த வியாபார மண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்’’ என அவ்வழக்கறிஞர் தமது மனுவில் கூறியுள்ளார்.