Home இந்தியா நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 அறிமுகம்!

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 அறிமுகம்!

662
0
SHARE
Ad

argentபுதுடில்லி 9 – நாடு முழுவதும் அனைத்து அவசரக்கால அழைப்புகளுக்கும் “112′ என்ற ஒரே எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவில் அனைத்து அவசரக் காலச் சேவைக்கும் 911 என்ற எண் பயன்படுத்தப்படுகிறது.

அதுபோல் இந்தியாவிலும் 100, 101, 102, 108 ஆகிய அவசரக் கால உதவி எண்களை ஒருங்கிணைத்து 112 என்ற ஒரே எண் அறிமுகப்படுத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

இனி, நாடு முழுவதும் அனைத்து அவசரத் தேவைகளுக்கும், தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே எண்ணாக 112 இருக்கும்.

இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், செயற்பாட்டுக்கும் தேவையான பணம் ‘நிர்பயா’ நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது உபயோகத்தில் இருக்கும் அவசரக் கால உதவி எண்களை, இரண்டாம் நிலை எண்களாகப் பயன்படுத்தலாம். இந்த எண்களுக்கு வரும் தொடர்புகள், புதிய எண்ணுக்கு மாற்றப்படும்.