Home இந்தியா விவசாயிகள் சங்க பாராட்டு விழா- ஜெயலலிதா நாளை தஞ்சை வருகை

விவசாயிகள் சங்க பாராட்டு விழா- ஜெயலலிதா நாளை தஞ்சை வருகை

691
0
SHARE
Ad

jeyalalithaதஞ்சாவூர், மார்ச். 8-  காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்ட முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா தஞ்சையில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை வருகிறார்.

தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்குகிறார்.
தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப்பேசுகிறார். விழாவில் முதல்அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.
தஞ்சையில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்றே முதல்அமைச்சர் ஜெயலலிதா கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார். இந்த பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் பந்தல் அமைக்கும்பணி நடைபெறும் அரங்கிலேயே இருந்து பணிகளை பார்வையிட்டு வருகிறார்கள். நேற்றும் அவர்கள் பந்தல் நடைபெறும் அரங்கில் இருந்து பணிகளை பார்வையிட்டனர்.
அவர்களுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், ரெங்கசாமி எம்.எல்.ஏ., நகரசபை தலைவி சாவித்திரிகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். முதல்அமைச்சர் தஞ்சை வருகையையொட்டி தஞ்சை விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. கொடிகளாகவே காணப்படுகின்றன.