Home இந்தியா தனது உடல்நிலை பற்றி ஜெயலலிதா மறைக்கிறார்- திமுக

தனது உடல்நிலை பற்றி ஜெயலலிதா மறைக்கிறார்- திமுக

638
0
SHARE
Ad

dmkசென்னை, ஜூலை 10- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு என்றும், சிறப்புச் சிகிச்சைக்காகவே கொடநாடு சென்றுள்ளார் என்றும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், இது வெறும் வதந்தியே; அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்து எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில்,”ஜெயலலிதா தனது உடல்நிலை குறித்த தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்காமல் மறைக்கிறார். அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதனால் அது குறித்துத் தெளிவான தகவல் தர வேண்டியது ஜெயலலிதாவின் கடமை. கடந்த 4 ஆண்டுகளாக அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைந்த் தவிர்த்து வருகிறார். இதைப் பற்றி ஏன் அரசு விளக்கம் அளிக்க மறுக்கிறது? நாங்கள் இதை வைத்து அரசியல் செய்யவில்லை” எனத் திமுக தெரிவித்துள்ளது.