Home கலை உலகம் ஹாலிவுட் நடிகர் ஓமர் ஷரிப் மாரடைப்பில் மரணம்!

ஹாலிவுட் நடிகர் ஓமர் ஷரிப் மாரடைப்பில் மரணம்!

524
0
SHARE
Ad

omarகெய்ரோ, ஜூலை 11 – ‘டாக்டர் ஆஃப் ஜிவாகோ’, ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ ஆகிய ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்ற எகிப்திய நடிகர் ஓமர் ஷரிப், தனது 83 வயதில் மரணமடைந்தார்.

எகிப்திய படங்களில் நடித்து புகழ்பெற்ற ஓமர் ஷரிப், 1962-ம் ஆண்டு வெளியான லாரன்ஸ் ஆஃப் அரேபியா படத்தின் மூலம் அமெரிக்காவில் பிரபலமடைந்தார்.

பீட்டர் டூல், அலெக் கின்னஸ் போன்ற பெரும் ஜாம்பவான்கள் ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்த அந்த காலத்தில், தனது அதிகார தொனி கலந்த நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து, குறுகிய காலத்தில் சிறந்த துணை நடிகருக்காக புகழ் பெற்ற விருதான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கும் அளவிற்கு முன்னேறினார்.

#TamilSchoolmychoice

அதன் பிறகு வெளியான டாக்டர் ஆஃப் ஜிவாகோ, ஃபன்னி கேர்ள் போன்ற படங்களில் அவரின் நடிப்பிற்காக கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவதிப்பட்டு வந்த ஓமர், நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.