சீனா, ஜூலை 11- சீனாவின் தெற்குப் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெரும் மழை பெய்து வருவதால், புயல் அபாய எச்சரிக்கை விடப்பட்டு, 10 லட்சம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் தெற்கு மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடுமையான புயல் சின்னம் சீனாவை வேகமாக நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக,சீனாவிலுள்ள பல நகரங்களில் இருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடனே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இப்பயங்கரப் புயல் மழையால் பலர் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மிக அதிக அளவில் மழையால் பாதிக்கப்பட்ட ஜிஜியாங்கில், கடுமையான நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் மிகுந்த பீதியில் இருக்கிறார்கள்.