சிப்பாங், ஜூலை 11 – எம்எச்17 விமானப் பேரிடரில் காலமானவர்களுக்கான நினைவு அஞ்சலிக் கூட்டம் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமைந்துள்ள பூங்கா ராயா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை 17-ம் தேதி, நடைபெற்ற இத்துயர சம்பவத்தில் பலியான, 10 நாடுகளைச் சேர்ந்த 298 பயணிகளின் பெயரும் அந்நிகழ்வில் பெரிய திரை ஒன்றில் வெளியிடப்பட்டது.
அப்போது, அங்கிருந்த பயணிகளின் உறவினர்கள் தங்களது துயரத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் சிந்தியது காண்பவரின் நெஞ்சை உருக்கியது.
இந்நிகழ்வில் பிரதமராக மட்டுமல்ல பயணி ஒருவரின் உறவினர் என்ற முறையிலும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது மனைவி டத்தின் ரோஸ்மா மன்சோருடன் கலந்து கொண்டு மற்ற பயணிகளின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த விமானப் பேரிடரில் நஜிப்பின் பாட்டி சிட்டி அமீரா பிரவீரா குசுமாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: EPA