சென்னை, ஜூலை 14- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று தனது 61-ஆவது பிறந்த நாளைக் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் விமரிசையாகக் கொண்டாடினார்.
அவருக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்.
அக்கடிதத்தில் அவர், ”’61-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த் துக்களை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலை ஆர்வம் மிக்கவராய்த் திரைத்துறையில் தனக் கெனத் தனி முத்திரை பதித்து வருவதோடு மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறந்த பணியாற்றி வரும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி அனைத்து வளமும், நல மும் பெற்று நீடுழிவாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த் திக்கிறேன்.
தங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலிலும் சினிமாவிலும் நாகரிகம் தெரிந்தவர் ஒரு சிலரே! அந்த வரிசையில் நடிகர் விஷாலும் இடம் பெறுகிறார்.
அந்தக் காலத்தில் எதிரெதிர் துருவங்களாகக் கருதப்பட்ட எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் ஆரத் தழுவிக் கொண்டு அளவளாவி மகிழ்வது வழக்கம். காரசாரமாய் அரசியல் அறிக்கை விட்டாலும்,வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நாகரிகம் தவறியதில்லை.
அதே காட்சி நீண்ட வருடங்கள் கழித்து இப்போது அரங்கேறுகிறது.
சமீபகாலமாக, நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிர் அணியிலிருந்து கொண்டு பலத்த மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள் நடிகர் சரத்குமாரும் விஷாலும்! ஒருவரை எதிர்த்து ஒருவர் அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டுப் பரம்பரை எதிரி போல் திரிகிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர் விஷாலும் நடிகர் சரத்குமாருக்குத் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரத் சார், இன்னும் நிறைய ஆண்டுகள் நீங்கள் நலமாக வாழ கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று சரத்குமாருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார் விஷால்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இதற்கு நன்றி ஏதும் தெரிவித்தாரா என்கிற செய்தி இதுவரை இல்லை. பார்க்கலாம்; அவருக்கும் நாகரிகம் இருக்கிறதா என்று!