Home நாடு ஆஸ்திரேலியா ஊழல் குற்றச்சாட்டு: மகாதீரின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை – பிரதமர் அலுவலகம் கேள்வி

ஆஸ்திரேலியா ஊழல் குற்றச்சாட்டு: மகாதீரின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை – பிரதமர் அலுவலகம் கேள்வி

632
0
SHARE
Ad

najib mahathirகோலாலம்பூர், ஜூலை 15 – லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஆஸ்திரேலியப் பத்திரிக்கைகள், அந்தக் காலகட்டத்தில் பிரதமராக இருந்த டாக்டர் துன் மகாதீரின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என பிரதமர் துறை அலுவலகம் (பிஎம்ஓ) கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து பிரதமர் துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அந்த லஞ்ச ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் 1999 மற்றும் 2004, காலக்கட்டத்தில் துன் மகாதீர் தான் பிரதமராக இருந்தார். ஆனால் ஃபேர்பேக்ஸ் மீடியா தன்னுடைய கட்டுரையில் எந்த இடத்திலும் துன் மகாதீரின் பெயரைக் குறிப்பிடவில்லை” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice