இதன்படி, அணுகுண்டுகளைத் தயாரிப்பதில்லை என ஈரானும், அதன் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடை செய்வதற்கு வகை செய்கிறது. மேலும், ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்வதாகச் சந்தேகம் எழுந்தால் அது தொடர்பாக ஐ.நா. சோதனை நடத்தவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தலைவர் யூகியா அமனோ, “ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப் பின் ஆய்வு தொடர்பான அறிக்கை டிசம்பர் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை `வரலாற்றில் இடம் பெறக்கூடிய மிகப்பெரிய தவறு’ என்று ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல் வர்ணித்துள்ளது.