பேட்லிஸ்யாஹ் விலகலை உறுதிபடுத்தி உள்ள சிஐஎம்பி வங்கி, எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல், அவரின் பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என்றும், புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை நிர்வாக பொறுப்புகளை முகமட் ஷாஃப்ரி ஷாகுல் ஹமிட் கவனித்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பேட்லிஸ்யாஹ் கூறுகையில், “இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாய் காத்திருந்தேன். எனது வாழ்க்கையில் நிகழ வேண்டிய முக்கியமான மாற்றம் இது. இடைப்பட்ட காலத்தில் நடந்த சில சம்பவங்கள் இந்த முடிவை விரைவாக எடுக்க வைத்துவிட்டன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 1எம்டிபி விவகாரத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிரதமர் நஜிப் மீது குற்றம்சாட்டி இருந்த சம்பவத்தின் போது, பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பேட்லிஸ்யாஹ், பேஸ்புக்கில் சில பதிவுகளை வெளியிட்டு இருந்தார். எனினும், அவரின் பதிவுகள் அவருக்கு எதிராகவே திரும்பியது குறிப்பிடத்தக்கது.