கொழும்பு, ஜூலை 16 – “நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து, வளங்களை சுரண்ட நினைப்பவர்கள் மறுஜென்மத்தில் நாய்களாகவும், காகங்களாகவும் பிறப்பெடுப்பர்” என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பேசுகையில், “நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து, வளங்களை சுரண்டிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தால், மீண்டும் சொத்துக்கள் கொள்ளைபோகும்”
“அவர்களின் இந்த செயல்களால் மறுஜென்மத்தில் அவர்கள் நாய்களாகவும், காகங்களாகவும் பிறப்பெடுப்பார்கள். எனவே அவர்கள் நல்ல பிறவிகளை எடுக்க வேண்டுமெனில் ஆகஸ்ட் 17-ம் தேதி தேர்தலில் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை மக்கள் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ராஜபக்சே பிரதமர் தேர்தலில் போட்டியிட இலங்கை பிரதமர் சிறிசேனா அனுமதி வழங்கியதற்கு அவரது கட்சிக்குள்ளாகவே பல எதிர்ப்புகள் இருந்து நிலையில், ராஜபக்சே குறித்து அவர் கூறியதாவது:-
“இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள எடுத்தத் தீர்மானம் சரியானதே. ராஜபக்சே அதிபராக பதவி ஏற்றிருந்தால் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கமாட்டார். கடந்த இரண்டு வாரங்களில் எனக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று வேறு எந்த அதிபருக்கும் தாக்குதல் நடத்தப்படவில்லை. பிரதமர் தேர்தலிலும் ராஜபக்சேவின் தோல்விகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.