Home வணிகம்/தொழில் நுட்பம் போயிங் நிறுவனத்துடன் கை கோர்க்கிறது டாடா!

போயிங் நிறுவனத்துடன் கை கோர்க்கிறது டாடா!

846
0
SHARE
Ad

boeingபுது டெல்லி, ஜூலை 16 – பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன், இந்தியாவின் புகழ் பெற்ற டாடா நிறுவனம் வர்த்தக ரீதியாக கைகோர்க்கிறது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து ஏரோஸ்பேஸ் விமானங்களையும், பாதுகாப்பு உபகரணங்களான ஆளில்லா விமானங்கள் போன்றவற்றையும் தயாரிக்க இருக்கின்றன.

இந்தியப் பிரதமர் மோடி, தனது கனவுத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’  (Make In India) திட்டம் மூலம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பாதுகாப்பான முதலீடுகளை செய்வதற்கு ஊக்குவித்து வருகிறார். அதன் முன்னோட்டமாக பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் கடந்த ஒருவருடமாக மிகப் பெரும் முதலீடுகளை செய்துவருகின்றன.

அத்தகைய வர்த்தகங்களில் ஒன்று தான் போயிங்-டாடா கூட்டு ஒப்பந்தம். இது பற்றி போயிங் நிறுவனம் கூறுகையில், “இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து எங்களுடைய தயாரிப்புகளை உருவாக்க உள்ளோம். இதற்கான வர்த்தகங்களையும் நாங்கள் மிகச் சிறப்பாக மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

டாடா நிறுவனம் ஏற்கனவே பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் ஏர்பஸ் குழுமத்துடனும், பிரபல அமெரிக்க நிறுவனமான ‘லாக்ஹீட் மார்டின்’ (Lockheed Martin) குழுமத்துடனும் பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.