இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒபாமாவின் அறிக்கையில், “ஈரான் ஒப்பந்தம் தவறு என்றால், அதை விட சிறந்த வழி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அது என்ன என்பது பற்றி என்னிடம் கூறுங்கள். இது மோசமான ஒப்பந்தம் என்று வர்ணிப்பதை விட உங்களிடம் இருக்கும் மாற்று வழியை கூறுங்கள்.”
“எனக்கு தெரியும் உங்களின் மாற்று வழி என்ன என்பது. நீங்கள் கூறும் மாற்றம் போர். ஈரானின் அணுஆயுதங்களை கட்டுப்படுத்த இதை விட சிறந்த வழி வேறொன்றும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு மாதங்களில் தயாரிக்கும் அணுகுண்டுகளை, ஈரான் தற்போது தயாரிப்பதற்கு ஒரு வருட காலமாகும். அதே சமயம், ஈரானின் அனைத்து செயல்பாடுகளும் ஐக்கிய நாடுகளின் சபையினால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.