Home தொழில் நுட்பம் மிகவும் மெலிதான ஏ8 திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது சாம்சுங்!

மிகவும் மெலிதான ஏ8 திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது சாம்சுங்!

658
0
SHARE
Ad

samsung-galaxy-a8கோலாலம்பூர், ஜூலை 16 – சாம்சுங் நிறுவனத்தின் திறன்பேசிகளில் மிகவும் மெலியதான ஏ8 திறன்பேசிகளை அந்நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது. சீனா மற்றும் சிங்கப்பூர் சந்தைகளுக்கு மட்டும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த திறன்பேசிகள், அங்கு பெரும் வரவேற்பினை பொறுத்து பிற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ8 திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள்:

CJ-qLvUUAAAxwPk* இந்த திறன்பேசியின் பருமன் 5.9 மில்லிமீட்டராகும். சாம்சுங் இதுவரை அறிமுகப்படுத்தியதில் இதுதான் மிகவும் மெலிதான திறன்பேசி. எனினும், இதற்கு முன் பல்வேறு சீன நிறுவனங்கள் இதை விட மெலிதான திறன்பேசிகளை அறிமுகப்படுத்தி உள்ளன.

#TamilSchoolmychoice

* இதன் திரை 5.7 அங்குலமும், 1080பிக்ஸல் எச்டி தீர்மானமும் கொண்டுள்ளது.

* சிறப்பு மிக்க கைரேகை பதிவு செய்யும் அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

* பிராசஸரை பொறுத்தவரை ‘ஆக்டா-கோர் ஸ்நாப்டிராகன் 615’ (octa-core Snapdragon 615) இருப்பதால், வேகம் அதி விரைவாக இருக்கும்.

*முதன்மை நினைவகம் (RAM) 2 ஜிபி, உள் நினைவகம் (Phone Memory) 16ஜிபி. புற நினைவகத்தை பொறுத்தவரை 128 ஜிபி வரை ஏற்றுக் கொள்ளும்.

அண்டிரொய்டு 5.1.1 லாலிபாப்பில் இயங்கும் இந்த திறன்பேசிகளின் விலை 515 டாலர்கள் என்று தெரியவருகிறது.

எனினும், சீனா மற்றும் சிங்கப்பூர் அல்லாமல் மற்ற நாடுகளுக்கு இந்த திறன்பேசிகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை.