கொழும்பு, ஜூலை 20- இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.
ஆனால்,மக்களிடையே அவருக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றும், அவருக்கான ஆதரவு நாடு முழுவதும் பெரிய அளவில் சரிந்துவிட்டதாகவும் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
“வர்த்தக சம்மேளனம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, சிங்கள- பௌத்த மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்சேவுக்கு இருந்த 53 சதவீதமான ஆதரவு, 43 வீதமாகத் திடீரெனக் குறைந்து விட்டது.
இதற்குக் காரணம், அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமராக ராஜபக்சேவை ஆதரிக்கப் போவதில்லையென்று வெளிப்படையாகப் பேசி வருவதேயாகும்” என்றார் அவர்.