லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 20- பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூரின் வீட்டு நீச்சல் குளத்தில் 21 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் அந்த நபர் போதையில் நிதானம் இல்லாமல் நீச்சல் குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என்றும், அவரது பெயர் எடெனில்சன் வேல்லே (21) என்றும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்தபோது டெமி மூர் மற்றும் அவரது குழந்தைகள் வீட்டில் இல்லை என்றும், அவர்கள் வெளியூர் சென்றிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், தனது வீட்டு நீச்சல்குளத்தில் இறந்து கிடந்த நபருக்கு டெமி மூர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Comments