Home உலகம் துருக்கியில் தற்கொலைப்படைத் தாக்குதல் – 30 பேர் பலி! 

துருக்கியில் தற்கொலைப்படைத் தாக்குதல் – 30 பேர் பலி! 

515
0
SHARE
Ad

turkey1இஸ்தான்புல், ஜூலை 21 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆளுமை செலுத்தி வரும் சிரியாவின் எல்லையோரப் பகுதியில் உள்ள துருக்கி நாட்டின் சுரக் நகர் கலாச்சார மையத்தில் நேற்று தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த கலாச்சார மையம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படும் இயக்கத்தினரால் நடத்தப்படுவதால் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

turkey2newதென்கிழக்கு எல்லையோர நகரமான சுரக்கில் குர்தீஸ் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்களை வெறுக்கும் இவர்கள் தான் ஈராக்கில் அந்த அமைப்பிற்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று, சுரக் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் தீவிரவாதி ஒருவன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் சம்பவ இடத்திலேயே 30 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவம் நடந்த சமயத்தில் அந்நாட்டின் பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன் வடக்கு சைப்ரஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். குண்டுவெடிப்பு பற்றி கேள்விப்பட்ட அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. தீவிரவாதம் எங்கிருந்து நடத்தப்பட்டாலும் அது ஒடுக்கப்படவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.