Home வணிகம்/தொழில் நுட்பம் சிஐஎம்பி குழுமத்தின் புதிய நிர்வாக இயக்குனர்கள் அறிவிப்பு!

சிஐஎம்பி குழுமத்தின் புதிய நிர்வாக இயக்குனர்கள் அறிவிப்பு!

651
0
SHARE
Ad

cimb_bankகோலாலம்பூர், ஜூலை 21 – சிஐஎம்பி குழுமம் தங்கள் நிறுவனத்தின் புதிய இயக்குனர்களாக முகமட் நசிர் அகமட் மற்றும் லீ கோக் க்வான் ஆகியோரை அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் நேற்று முதலே தங்கள் பணிகளை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இவர்களின் நியமனம் தொடர்பாக சிஐஎம்பி குழுமத்தின் தலைமை நிர்வாகி ஸஃப்ருள் அஜிஸ் கூறுகையில், “முகமட் நசிர் அகமட் மற்றும் லீ கோக் க்வான் ஆகிய இருவரும் ஆட்சி மற்றும் ஆலோசனைக் குழுவில் பல்வேறு முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளனர். நிதியைக் கையாள்வதில் இருவருக்கும் ஆழ்ந்த அனுபவம் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

லீ இதற்கு முன்பாக சிஐஎம்பி-ல் தலைமை நிர்வாகிக்கு ஆலோசனைகள் வழங்கும் குழுவில் இருந்தார். தற்போது புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதால் அவரின் பழைய நிர்வாக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முகமட் நசிர் அகமதை பொருத்தவரையில் தனியார் மற்றும் அரசு சார் நிறுவனங்களில் பல்வேறு முக்கிய பதவிகளை கவனித்து வந்தார். பாராம்பரிய நிதி சேவைகளிலும், கணக்குகளிலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், சிஐஎம்பி குழுமம் இவரிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது.