Home இந்தியா “காணொளி முதல்வர் எங்களுக்கு வேண்டாம்” – ஜெயலலிதாவை சீண்டும் தமிழிசை!

“காணொளி முதல்வர் எங்களுக்கு வேண்டாம்” – ஜெயலலிதாவை சீண்டும் தமிழிசை!

491
0
SHARE
Ad

thamizசென்னை, ஜூலை 21 – “எங்களுக்கு கண்ணால் காணும் முதல்வர் தான் வேண்டும். காணொளி முதல்வர் வேண்டாம்” என்று தமிழக பாஜ கட்சி  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சமீபகாலமாக தலைமைச் செயலகம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், பத்து நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை. இதனால் மக்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லை என்றால் முதல்வர் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் என எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக சேலத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “இத்தனை மாதங்களாக முடங்கிக் கிடந்த தமிழக அரசு, ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்ற பிறகாவது செயல்படும் என்று பார்த்தால் இன்னும் முடங்கிப்போய்க் கொண்டிருக்கிறது. தொழில்துறையும் பெரிய அளவில் முடங்கி உள்ளது. அமைச்சர்கள் அனைவரும் முடங்கிக்கிடக்கின்றனர். எல்லா திட்டங்களும் காணொளிக் காட்சி மூலமே திறக்கப்படுகின்றன. எங்களுக்கு கண்ணால் காணும் முதல்வர் தான் வேண்டும். காணொளி முதல்வர் வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “தமிழகத்தில் இந்துகளை காலூன்ற விடமாட்டோம் என்று வைகோ எச்சரிக்கிறார். இந்தியாவின் வரமாக வேரூன்றி இருப்பது இந்து மதம். அதேபோல தமிழகத்தில் ஆலமரமாக வேரூன்றி பா.ஜ. கட்சி ஆட்சியைப் பிடிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.