Home இந்தியா மின்சாரச் சட்டத்தில் புதிய திருத்தங்களுக்குக் கருணாநிதி எதிர்ப்பு

மின்சாரச் சட்டத்தில் புதிய திருத்தங்களுக்குக் கருணாநிதி எதிர்ப்பு

533
0
SHARE
Ad

karuசென்னை, ஜூலை 22- மின்சாரச் சட்டத்தில் மத்திய அரசு செய்யவுள்ள புதிய திருத்தங்களுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின்சாரச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் தேவை தானா? என்றும் மத்திய அரசுக்குத் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘மின்சாரச் சட்டம் 2003ல்’ திருத்தம் செய்து, ‘மின்சாரச் சட்டம் 2014’ என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்தச்  சட்டம் நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, அந்தக் குழுவும் 5-5-2015 அன்று தனது 12 வகையான பரிந்துரைகளுடன் அறிக்கை வழங்கியுள்ளது.

அந்தக் குழுவின் பரிந்துரைகள் அப்படியே நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமானால், பொது மக்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.

மின் விநியோகம் முழுவதும் தனியார் கைகளுக்குச் சென்றுவிடும்.

விவசாயம், கைத்தறி, விசைத்தறி, குடிசைகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாகும் நிலை உருவாகும்.

மின்சாரத்திற்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும்.

அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் தனியாரைச் சார்ந்திருக்கும் நிலை மாநில அரசுகளுக்கு உருவாகும்.

புதிய திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும்; அதேசமயம்,  மத்திய – மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பில் இருக்கும் மின்சாரம் மொத்தமாக மத்திய அரசு மேலாண்மையின் கீழ் சென்றுவிடும்.

பிரதமர் மோடி ஏற்கனவே ஆட்சி புரிந்த குஜராத் மாநில அரசும் புதிய திருத்தங்களை எதிர்ப்பதைக் கருத்தில் கொண்டு, தற்போதைய மின்சார கட்டமைப்புகளில் எந்தவொரு அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.