Home கலை உலகம் இப்ராகிம் ராவுத்தர் மறைவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

இப்ராகிம் ராவுத்தர் மறைவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

637
0
SHARE
Ad

1437545833-8402சென்னை,ஜூலை 23- இப்ராஹிம் ராவுத்தரின் உடல் இன்று நண்பகல் 12 மணியளவில் சாலிகிராமம் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இப்ராஹிம் ராவுத்தரின் மறைவுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

“ராவுத்தர் என்று தமிழ்த் திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்பட்ட அ.செ.இப்ராகிம் ராவுத்தர், ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’ போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். திரைப்படக் கல்லூரியில் படித்து வந்த பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தவர். பல புதிய இயக்குநர்கள் உருவாகக் காரணமானவர்.

திரைப்படத் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்தவர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகப் பதவி வகித்தவர். அன்பானவர், பண்பானவர், அனைவரிடமும் இன்முகத்தோடு பழகக்கூடியவர்.

அப்படிப்பட்ட நல்ல மனிதர் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். எனவே, அவரின் மறைவுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்” என்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.