சன் குழுமம் மீதான அரசின் இந்த நடவடிக்கை ஊடகச் சுதந்திரம் மீதான தாக்குதல் எனக் கூறி மத்திய அரசுக்குத் தேசியப் பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்தன.
சன் குழுமத்தின் வானொலியால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது நகைப்புக்குரியது எனவும் பத்திரிகைகள் கருத்துத் தெரிவித்தன.
இந்நிலையில்,இதை எதிர்த்துச் சன்குழுமம் தொடர்ந்த வழக்கில், பண்பலை அலைவரிசை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்க சன்குழுமத்திற்கு இடைக்கால அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்றாலும், பிரதான வழக்கின் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments