Home இந்தியா தங்கம் விலை வீழ்ச்சி தொடரும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

தங்கம் விலை வீழ்ச்சி தொடரும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

692
0
SHARE
Ad

goபுதுடில்லி, ஜூலை 23- அனைத்துலகச் சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதிச் சேவை நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் கணித்துள்ளது.

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகச் சந்தையில் தொடர்ந்து 10 நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வருவது இதுவே முதல் முறையாகும்.

#TamilSchoolmychoice

உலகச் சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து, சென்னையிலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் சவரனுக்கு சுமார் 2 ஆயிரம் வரை ரூபாய் விலை குறைந்துள்ளது.

மும்பையில் தங்கத்தின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், உலகளவில் தங்கத்தின் தேவை குறையும் என்ற அச்சத்தின் விளைவாகவே அதன் விலை சரிவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.