“இப்ராஹிம் ராவுத்தர் தலைமைக்கழகப் பேச்சாளராக, கட்சியின் கொள்கைகளையும் அதிமுக அரசின் சாதனைகளையும், எதிர்க்கட்சியின் பொய்ப் பிரச்சாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா சார்பில் அமைச்சர் பா.வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, அப்துல் ரஹீம் ஆகியோர் இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.