Home உலகம் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க முடியாமல் தவிக்கிறேன் – ஒபாமா!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க முடியாமல் தவிக்கிறேன் – ஒபாமா!

637
0
SHARE
Ad

Guns-in-Americaநியூ யார்க், ஜூலை 24 – “அமெரிக்காவில் துப்பாக்கிகளால் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் வேதனை அளிக்கின்றன. துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற முடியாமல் போனது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்காவில் துப்பாக்கிகளால் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஏராளமான மக்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க நான், துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த பலமுறை முயற்சி செய்து வருகிறேன். எனினும் எனக்கு தோல்வியே கிடைத்து வருகிறது”

“9/11 தாக்குதலில் பலியானவர்களை விட, கடந்த சில வருடங்களில் துப்பாக்கி கலாச்சாரத்தினால் பலியானவர்கள் தான் அதிகம். இருந்தும் எங்களால் அத்தகைய சம்பவங்களை தடுக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில், பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டினால், 8,855 பேர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு, துப்பாக்கிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் உரிமம் தொடர்பாக தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்று வந்தாலும், அதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.