Home கலை உலகம் கேன்ஸ் விருது பெற்ற ‘மஸான்’ திரைப்படம் நாளை வெளியீடு

கேன்ஸ் விருது பெற்ற ‘மஸான்’ திரைப்படம் நாளை வெளியீடு

678
0
SHARE
Ad

20cannes-richa-chadda5மும்பை, ஜூலை 24- திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருதைத் தட்டிச் சென்ற இந்திப் படம் ‘மஸான்’. 68-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒரே இந்தியப் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

இப்படத்தில் விக்கி கவுசால், ரிச்சா சந்தான் மற்றும் ஸ்வேதா திரிபாசு முதலானோர் நடித்துள்ளனர்.

இந்தித் திரைப்பட உலகின் புரட்சி இயக்குநரான அனுராக் கஷ்யப்பிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த நீரஜ் கெய்வான் என்பவர் இயக்கிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

முதல் படத்திலேயே கேன்ஸ் விருதை வென்றிருப்பது, உலகளவில் இவருக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாகும்.

நான்கு சிறிய நகரங்களுக்கு இடையேயான பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், திரைப்பட விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றிருக்கிறது.

இந்தித் திரையுலகம் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம்,  நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.