Home நாடு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக தொழிலதிபர் ஜோ லோவுக்கு பிஏசி உத்தரவு!

செப்டம்பர் 8-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக தொழிலதிபர் ஜோ லோவுக்கு பிஏசி உத்தரவு!

545
0
SHARE
Ad

jho low

கோலாலம்பூர், ஜூலை 24 – 1எம்டிபி விவகாரம் தொடர்பில், தொழிலதிபர் லோ தாயிக் ஜோவுக்கு (படம்), பொதுக் கணக்குகள் ஆணையம் (Public Accounts Committee – PAC) சம்மன் விதித்துள்ளது.

நேற்று அந்த உத்தரவு அடங்கியக் கடிதத்தை நிதியமைச்சுக்கு அனுப்பியுள்ள பிஏசி, வரும் செப்டம்பர் 8-ம் தேதிக்குள் பை-பார்டிசன் நாடாளுமன்ற ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்தக் கடிதம் நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காரணம், 1எம்டிபி-ல் நிதியமைச்சு தான் முக்கியப் பங்குதாரர். அவர்களுக்குத் தான் ஜோ லோவின் பின்னணியும், அவரை எப்படி கண்டுபிடிப்பது என்பதும் தெரியும் என்று பொதுக் கணக்குகள் ஆணையத்தின் தலைவர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் தெரிவித்துள்ளார்.