Home இந்தியா ராகுலின் தமிழக வருகை வீண்- தமிழிசை செளந்தரராஜன் கருத்து!

ராகுலின் தமிழக வருகை வீண்- தமிழிசை செளந்தரராஜன் கருத்து!

652
0
SHARE
Ad

rakulசென்னை, ஜூலை 24- ராகுல்காந்தி தமிழகத்திற்கு வந்து பேசிச் சென்றது,தமிழக மக்களிடத்தில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. அவ்விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது உரையாற்றினார்.

ஆனால், அவரது வருகையோ உரையோ தமிழக மக்களைப் பெரிய அளவில் கவர்ந்ததாகத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன், ராகுல் காந்தியின் தமிழக வருகை பற்றிக் கருத்துரைத்துள்ளார்.

“ராகுல்காந்தி பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார்.மக்களோடு மக்களாக இருப்பது போல் பாவ்லா காட்டியுள்ளார்.குடிசைக்குள் புகுந்து கூழ் குடித்திருக்கிறார்.நடைப்பயணம் போகிறேன் என்று ஊர் ஊராய்ச் சுற்றியிருக்கிறார்.ஆனால், எப்போதுமே அவரது வருகை எந்த மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அதே போல, அவரது வருகை தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை”என்று கூறியுள்ளார்.

மேலும்,”இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்காத ஒருவரைப் போல, ராகுல் தனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று கூறியுள்ளார் ராகுல்காந்தி. ஆனால், சென்ற பத்துஆண்டுகாலமாக வாய்ப்பிருந்தும் அவர் எதையுமே செய்யாதது ஏன்?” என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.