Home நாடு ஊடகங்களுக்கு தடை விதிப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது: ரபிடா

ஊடகங்களுக்கு தடை விதிப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது: ரபிடா

804
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 26 – குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு தடை விதிப்பது என்ற அரசின் நடவடிக்கையானது பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என முன்னாள் அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அசிஸ் தெரிவித்துள்ளார்.

AZMIN-CADANG-RAFIDAH-AZIZ-KETUAI-RUNDIGAN-TPPAஇது தொடர்பாக அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இத்தகைய தடையானது மக்களை வெறுப்படைய வைப்பதுடன், அரசு குறித்த அதிருப்தியை மேலும் வளர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1எம்டிபி மட்டுமல்லாது பொதுநலன் சார்ந்த இதர விஷயங்கள் குறித்தும் ஊடகங்கள் உண்மையை மட்டுமே வெளியிட வேண்டும் என ரபிடா கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“சில செய்திகள் மக்களை அதிருப்தியடைய வைக்கலாம். எனினும் ஊடகங்களை அளவுக்கதிகமாக தண்டித்துவிடக் கூடாது என்பதே முக்கியம். சில நாடுகளில் இருக்கும் நடைமுறையைப் போன்று, சில விஷயங்கள் குறித்து செய்திகளை வெளியிடலாம் அல்லது கூடாது என நாம் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது,” என ரபிடா அசிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அம்னோவின் முன்னாள் மகளிர் பகுதித் தலைவியும், முக்கியத் தலைவர்களில் ஒருவருமாகத் திகழ்ந்த ரபிடாவின் இந்த பகிரங்க கருத்தைத் தொடர்ந்து, அம்னோவுக்குள்ளும் நஜிப்பின் தலைமைத்துவப் போக்கிற்கு எதிரான கருத்துக்கள் கிளம்பியிருக்கின்றன என்பது தெளிவாகியுள்ளது.