அப்போது அவர் கூறியதாவது, “இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. தமிழர்கள் சமஉரிமை பெற்று மதிப்புடனும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்காக தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அங்கு அரசியல் ரீதியிலான சமரசம் ஏற்பட வேண்டும். அது ஏற்படும்வரை பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. தீவிரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் பேச வேண்டும். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட்டால் அது தீவிரவாதத்தை ஒடுக்க பயன்படும். இதை அமைப்பது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்துவோம்” இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.