Home நாடு டேசா மெலாவத்தி: 2.8 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

டேசா மெலாவத்தி: 2.8 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

489
0
SHARE
Ad

Crime-Pixகோலாலம்பூர், ஜூலை 28 – டேசா மெலாவத்தியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது 2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து 22 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும், புக்கிட் அமானின் போதைப் பொருள் சிறப்பு தடுப்பு பிரிவினர் இந்தச் சோதனையை நடவடிக்கையை சனிக்கிழமை மேற்கொண்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

டேசா மெலாவத்தியில் உள்ள கடையில் கண்டெய்னர்களில் பிராணிகளுக்கான உணவுப் பொருட்களுடன், போதைப் பொருள் அடங்கிய உறைகளையும் சேர்த்து வைத்து, அதிகாரிகளை ஏமாற்ற இந்தப் போதைப் பொருள் கடத்தல் கும்பல் முயற்சித்துள்ளது.

#TamilSchoolmychoice

“காவல்துறையை விட தாங்கள் புத்திசாலிகள் என அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கருதியுள்ளனர். ஆனால் அவர்களை விட நாங்கள் புத்திசாலிகள்,” என புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் மொக்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“காவல்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை ஏறத்தாழ 12 மணி நேரம் சோதனை நடத்தினர். அங்கிருந்த கண்டெய்னர்களில் சோதனை நடத்தப்பட்டது. அவை அனைத்தும் கராச்சி நகரில் இருந்து வந்தவை. அந்தப் போதை பொருள் மலேசியாவில் விற்கப்பட கொண்டு வரப்பட்டவை அல்ல. மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது,” என்றார் முகமட் மொக்தார்.