Home இந்தியா மருத்துவமனைக்கு வரும் முன்னரே கலாமின் உயிர் பிரிந்ததாகத் தகவல்!

மருத்துவமனைக்கு வரும் முன்னரே கலாமின் உயிர் பிரிந்ததாகத் தகவல்!

656
0
SHARE
Ad

APJ-Abdul-Kalam1ஷில்லாங், ஜூலை 27 – முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சற்று முன் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் முன்னரே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையின் இயக்குனர் ஜான் சைலோ ரிண்டாதியாங் கூறுகையில், “கலாமை மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்னரே அவரது உயிர் பிரிந்து விட்டது. எனினும், நாங்கள் அவரை உயிர் பிழைக்க வைக்க பெரும் முயற்சி எடுத்தோம். அவை எதுவும் பலனளிக்க வில்லை” என்று கூறியுள்ளார்.

அப்துல் கலாமின் மறைவு நாட்டின் மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)