பிரதமர் மோடி கலாமின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “கலாமின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறுதிவரை இந்தியாவின் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அப்துல் கலாமின் இந்த திடீர் இறப்பு மிகப் பெரும் துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நமது தலைமுறைகளுக்கான உத்வேகம் தான் கலாம். அவரின் இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனது அறிவாலும், எளிமையாலும் நாட்டின் கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர். அவரது மறைவு தாங்க முடியாத துக்கத்தைத் தருகிறது” என்று கூறியுள்ளார்.