முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு இந்திய அரசு , 7 நாட்கள் தேசிய துக்கமாக அறிவித்துள்ளது. நாளை பாராளுமன்றம் கூடி துக்க அனுசரிப்பு நிகழ்வினை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசு நாளை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு சார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.
(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)
Comments