Home இந்தியா தமிழத்தின் மைந்தர் அப்துல் கலாம் – முதல்வர் ஜெயலலிதா புகழாரம்!  

தமிழத்தின் மைந்தர் அப்துல் கலாம் – முதல்வர் ஜெயலலிதா புகழாரம்!  

546
0
SHARE
Ad

apj-abdul-kalamசென்னை, ஜூலை 28 – “முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ மக்களின் எண்ணங்களில் மண்ணின் மைந்தராக விளங்கியவர்” என்று முதல்வர் ஜெயலலிதா, அப்துல் கலாமிற்கு புகழாரம் சேர்த்துள்ளார்.

காலமின் மறைவு குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ மக்களின் எண்ணங்களில் மண்ணின் மைந்தராக விளங்கியவர். ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பால், முயற்சியால் வியக்கத்தகு இடத்தைப் பெற்றவர். சுதந்திர இந்தியாவில் குறிப்பிடத்தக்க மனிதர்களில் ஒருவராக அப்துல் காலம் இருந்தார். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

கலாமின் மறைவிற்கு துக்க அனுசரிப்பாக தமிழ அரசு, இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு சார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.