ஷில்லாங், ஜூலை 28 – இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் பின்பற்றியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். முதல் குடிமகனாக பதவி வகித்திருந்தாலும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுடனும் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ஷில்லாங் ஐஐஎம் நிறுவனத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கூட, தனது டுவிட்டர் பக்கத்தில், “ஷில்லாங் போகிறேன். வாழத்தகுந்த கிரகம் பூமி என்னும் தலைப்பில் ஐஐஎம்-ல் பாடம் நடத்தப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐஐஎம்-ல் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் திடீர் என அப்துல் கலாம் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை உதவியாளர்கள் ஷில்லாங் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவரது உயர் பிரிந்து விட்டது.